தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபானக் கடையை திறக்கக் கோரி மீனவப் பெண்கள் மனு - மாவட்ட ஆட்சியர்

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் மதுக்கடை திறக்கக் கோரி மீனவப் பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மதுபான கடையை திறக்க கோரி மீனவ பெண்கள் மனு

By

Published : Jul 22, 2019, 4:30 PM IST

அந்த மனுவில், ராமேஸ்வரம் புனிதத் தலமாக விளங்கி வருகிறது என்பதால் இங்கு மதுக்கடைகள் திறக்கவில்லை. இதைப் பயன்படுத்தி பலர் பெட்டிக் கடைகள், காய்கறிக்கடைகள், கடற்கரை ஓரங்கள் என அனைத்து இடங்களிலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருகின்றனர்.

மதுபானக் கடையை திறக்கக் கோரி மீனவப் பெண்கள் மனு

இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை புகார் அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாமல் காலையிலேயே குடிப்பதால் வருமானமின்றி தவிக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு தீர்வளிக்கும் வகையில் ராமேஸ்வரம் பகுதியில் மதுபானக் கடையைத் திறக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details