தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமேஸ்வரத்தில் 7ஆவது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்! - கைதான மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தல்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களையும், பறிமுதல் செய்த படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

protest
protest

By

Published : Dec 21, 2020, 6:33 PM IST

இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களையும், பறிமுதல் செய்த படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி கடந்த கடந்த 16ஆம் தேதி ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக ஏழாவது நாளாக போராட்டம் நீடித்து வரும் நிலையில், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.

மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

இதனால், 600க்கும் மேற்பட்ட பெரிய படகுகள் கடலுக்குச் செல்லாமல் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், அவர்களது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் மீனவ பெண்கள் மற்றும் மீனவர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை

வருகின்ற 30ஆம் தேதி இலங்கை-இந்திய மீனவர் பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருந்தார். அதற்கான எந்த அறிவிப்பும் இதுவரை இந்திய மீனவர்களுக்கு அளிக்கப்படவில்லை. டிசம்பர் 30ஆம் தேதி நடக்கவுள்ள இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தையில் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:தின்பண்டங்களைக் கொண்டு கிறிஸ்துமஸ் குடில் - புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்

ABOUT THE AUTHOR

...view details