கடந்த ஜனவரி 13 ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது. இவர்களின் நீதிமன்ற காவலை வரும் மே மாதம் 6 ஆம் தேதி வரையில் நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்பாணம் சிறையில்அடைக்கப்பட்டனர்.
தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம் - Fishermen hunger strike.
ராமநாதபுரம்: இலங்கை சிறையில் இருக்கும் தமிழக வீரர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-3077861-thumbnail-3x2-hungerstrike.jpg)
மீனவர்கள் உண்ணாவிரதம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள், நண்பர்கள் தங்கச்சிமடத்தில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் துணை கண்காணிப்பாளர் மகேஸ், மீனவர்களை வரும் 6 ந் தேதிக்குள் விடுதலை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.இதனை ஏற்று கொண்ட உறவினர்கள் கலைந்து சென்றனர்.