தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’கைது நடவடிக்கை தொடரும்’ - இலங்கை கடற்படை அறிவிப்பால் மீனவர்கள் அச்சம்

ராமநாதபுரம்: இந்திய மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்ற இலங்கை கடற்படையின் அறிவிப்பால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

By

Published : Mar 30, 2021, 12:03 PM IST

Updated : Mar 30, 2021, 12:08 PM IST

fishermen get fear about srilanka govt announcement
இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா

தமிழ்நாட்டிலுள்ள ராமேஸ்வரம், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 52 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி கடந்த வாரம் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், அவர்கள் சென்ற ஐந்து படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் இதனைக் கண்டித்து மீனவர்கள் போர்க்கொடி உயர்த்தியதைத் தொடர்ந்து மத்திய அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டது. அதன் அடிப்படையில் உடனடியாக இலங்கை அரசு 52 மீனவர்களையும், ஐந்து படகுகளையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இது மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும், இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா தற்போது தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையின் இந்த அறிவிப்பு ராமேஸ்வரம் மீனவர்கள் மட்டுமல்லாது இலங்கையை ஒட்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:நோ லாக்டவுன், நோ ஊரடங்கு- எடியூரப்பா!

Last Updated : Mar 30, 2021, 12:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details