தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருப்புக்கொடி கட்டி கச்சத்தீவு நோக்கி செல்லும் போராட்டம்: ராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானம்! - ராமநாதபுரம் அண்மை செய்திகள்

கச்சத்தீவு அருகே இந்திய இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்க இருநாட்டு அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, 23ஆம் தேதி, ராமேஸ்வரத்திலிருந்து கச்சத்தீவு நோக்கி கருப்புக்கொடி கட்டி பயணம் செய்து போராடப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

கருப்பு கொடி கட்டி கச்சத்தீவு  நோக்கி செல்லும் போராட்டம்
கருப்பு கொடி கட்டி கச்சத்தீவு நோக்கி செல்லும் போராட்டம்

By

Published : Jan 14, 2021, 10:38 PM IST

ராமநாதபுரம்: இராமேஸ்வரத்தில் இன்று(ஜன.14) மீனவ சங்க பிரதிநிதிகள் கூட்டம் அனைத்து மீனவச் சங்க செயலாளர் சேசுவராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்களை விடுதலை செய்ததற்கு மத்திய மாநில அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். தற்போது விடுதலை செய்யப்பட்ட மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு அரசுடைமையாக்கி அறிவித்துள்ளது.

அதனை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடந்த 1974 ஆம் ஆண்டு போடப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி இருநாட்டு மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும், அதற்கு இரு நாட்டு அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை வலியுறுத்தும் விதமாக வரும் 23ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து விசைப்படகில் கருப்புக்கொடி கட்டி கச்சத்தீவு நோக்கி பயணம் செல்ல இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இருநாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி எல்லைப் பகுதியில் மீனவர்கள் சுமுகமாக மீன்பிடித்த அனுமதி வழங்கும் பட்சத்தில் இதற்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 4 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details