ராமநாதபுரம் : பாம்பனில் உள்ள மாதா கோயிலுக்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர், கல்லறை தோட்டம் பகுதியை அளவீடு செய்துள்ளார்.
இனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், பாம்பன் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலரை உள்ளே வைத்து பூட்டி மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு சென்ற வட்டாட்சியர் மார்ட்டின் ராஜ், மண்டபம் ஆய்வாளர் ஜீவரத்தினம் ஆகியோர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியல் போராட்டத்தை பொதுமக்கள் விலக்கிக்கொண்டனர்.
பின்னர் கிராம நிர்வாக அலுவலரை மாற்றக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதையும் படிங்க : விடைபெறுகிறார் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஜே.கே. திரிபாதி!