தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறால் மீன்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை - மீனவர்கள் வேதனை - Prawn price

மீன்பிடி தடை காலத்திற்குப் பின்பு மீனவர்கள் கடலுக்குள் சென்ற நிலையில் இறால் மீன்களின் வரத்து அதிகமாக இருந்தாலும் போதிய விலை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இறால் மீன்கள்
இறால் மீன்கள்

By

Published : Jul 1, 2021, 7:16 PM IST

ராமநாதபுரம்: மீன்பிடி தடைகாலம், கரோனா இரண்டாம் அலை பாதிப்பால் 75 நாள்களுக்குப் பின்பு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 630 விசைப்படகுகளில் 3500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

அதிகப்படியான மீன்கள் கிடைத்தாலும் உயிரைப் பணயம்வைத்து பிடித்து வரக்கூடிய இறால் மீன்களுக்குப் போதிய விலை கிடைக்கவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

குறைந்தது இறால்களின் விலை

கடந்த காலங்களில் 600 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டுவந்த இறால் மீன்களின் விலை இன்று 300 ரூபாய்க்கும் குறைவாகவே தனியார் ஏற்றுமதியாளர்கள்கொள்முதல்செய்கின்றனர்.

இதனால் பல லட்சம் ரூபாய் செலவுசெய்து பிடித்து வரக்கூடிய மீன்களை உற்பத்தியாளர்கள் விலை குறைவாக கொள்முதல்செய்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

மீனவர்கள் பிடித்து வரக்கூடிய மீன்களுக்கு தமிழ்நாடு அரசு விலை நிர்ணயம்செய்ய வேண்டும் என ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details