தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுக்கடலில் வலையில் சிக்கி மீனவர் உயிரிழப்பு - ராமேஸ்வரம் செய்திகள்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே பைபர் படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் நடுக்கடலில் வலையில் சிக்கி உயிரிழந்தார்.

fisherman-who-went-fishing-was-trapped-in-the-middle-of-the-sea-and-dead-near-rameswaram
fisherman-who-went-fishing-was-trapped-in-the-middle-of-the-sea-and-dead-near-rameswaram

By

Published : Apr 16, 2020, 2:05 PM IST

ராமேஸ்வரம் அருகே மண்டபம் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் சீனி முகைதீன் பீர்ஒலி (24). மீனவரான இவர், தர்மராஜ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் மகேஷ், சித்திரன், அர்ச்சுனன், முனிஸ்வரன், பிரகாஷ் ஆகிய மீனவா்களுடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சீனிமுகைதீன் பீர்ஒலி வலையை விரிக்க கடலில் இறங்கியுள்ளார்.

அப்போது அவரது கால் வலையில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் நீரில் மூழ்கி மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து, சக மீனவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டுவந்த பின்னர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அவரது உடல் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காகக் கொண்டுசெல்லப்பட்டது. இது குறித்து மண்படம் கடலோரப் பாதுகாப்புக்குழும காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:ஊரடங்கால் வேலையிழந்து தவிக்கும் மரச்சிற்பக்கலை தொழிலாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details