தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை கடற்படை தாக்குதலில் மீனவர் படுகாயம்

இலங்கை கடற்படையினர் கற்கள், பாட்டில்கள் உள்ளிட்டவைகளை எறிந்து தாக்குதல் நடத்தியதில், மீனவர் ஒருவர் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய படுகாயமடைந்த மீனவர் தொடர்பான காணொலி
செய்தியாளர்களிடம் பேசிய படுகாயமடைந்த மீனவர் தொடர்பான காணொலி

By

Published : Aug 12, 2021, 7:08 PM IST

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தின் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று (ஆக.11) மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

அப்போது கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, அதிவிரைவு படகில் வந்த இலங்கை கடற்படையினர் கற்கள், பாட்டில்கள் உள்ளிட்டவைகளை கொண்டு தாக்கியுள்ளனர்.

இதில் பாம்பன் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வம், தலையில் அடிட்டு பலத்த காயடைந்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய படுகாயமடைந்த மீனவர் தொடர்பான காணொலி

வலைகளை அறுத்த இலங்கை கடற்படை

இந்நிலையில் அவர் இன்று (ஆக. 12) காலை மண்டபம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின் வீடு திரும்பினார். இதேபோன்று ஐந்திற்கும் மேற்பட்ட படகுகளில் உள்ள வலைகளை அறுத்து இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டதாக, கரை திரும்பிய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனால் சுமார் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை, இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தையை சுமூகமான முறையில் அணுகி, ஒன்றிய அரசு பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:வேளாண் பட்ஜெட்: கூட்டுப்பண்ணை முறையை ஊக்குவிக்க வேண்டும் - இயற்கை வேளாண் அறிஞர் பாமயன்

ABOUT THE AUTHOR

...view details