தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

20 அடி கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி - பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை - ramanadhapuram district news

ராமநாதபுரம்: 20 அடி ஆள கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி நான்கு நாள்களுக்குப் பிறகு தீயணைப்புத்துறை உதவியுடன் மீட்கப்பட்டது.

puppy
puppy

By

Published : Jul 18, 2020, 9:41 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் கிராமத்தில் நீரில்லாத 20 அடிக் கிணறு மூடப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில், அந்த கிணற்றில் நான்கு நாள்களுக்கு முன்பு அப்பகுதியில் சுற்றித் திரிந்த நாய்க்குட்டி ஒன்று தவறி விழுந்தது.

நாய்க்குட்டி குரைக்கும் சத்தம் கேட்டு பேரையூரைச் சேர்ந்த இளைஞர்கள் இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புத்துறையினர் கிணற்றில் ஏணி, கயிறு கட்டி இறங்கி நாய்க்குட்டியை பத்திரமாக மீட்டனர். நாய்க்குட்டியை பத்திரமாக மீட்ட மீட்ப்புத்துறையினருக்கு பேரையூர் இளைஞர்கள் மற்றும் பேரையூர் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

நாய்க்குட்டியை மீட்ட தீயணைப்புத் துறை

மேலும், கிணற்றை பாதுகாக்கவும், அதனை மூடி நடவடிக்கை எடுக்குமாறும் பேரையூர் ஊராட்சி மன்ற தலைவரிடம் மீட்புத்துறையினரால் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது - கமல்ஹாசன் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details