தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொண்டருக்கு திமுக நிதியுதவி! - மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே கிராம சபை கூட்டத்தின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த திமுக தொண்டருக்கு கட்சியின் சார்பாக ஒன்றரை லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டது.

Financial assistance to the volunteer died due to electric shock!
Financial assistance to the volunteer died due to electric shock!

By

Published : Jan 8, 2021, 1:58 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேவுள்ள உரப்புளி கிராமத்தில் இரு தினங்களுக்கு முன்பு திமுகவின், ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்காக கொடிமரம் கட்டும் போது திமுக தொண்டரான ராஜேஷ் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த தொண்டரின் குடும்பத்திற்கு கட்சி சார்பில் நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவிகப்பட்டிருந்தது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், இறந்த கட்சி தொடண்டரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் கட்சியின் சார்பாக ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி உதவியாக வழங்கினார். உயிரிழந்த ராஜேஷுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இணையதளங்களில் மாஸ்டர் திரைப்படம் வெளியிட தடை!

ABOUT THE AUTHOR

...view details