தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வலி உயிர் போகிறது' - வைரலாகும் பெண் கரோனா நோயாளியின் கதறல் வீடியோ! - வலி உயிர் போகிறது

ராமநாதபுரம்: 'வலி உயிர் போகிறது; இரண்டு நாட்களாக ஊசி கூட போடவில்லை; மருத்துவர்கள் கவனிக்கவேயில்லை. நான் செத்துவிடுவேன் போல இருக்கிறது' என ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் பெண் கரோனா நோயாளியின் கதறல் வீடியோ வைரலாகி வருகிறது.

”வலி உயிர் போகிறது ” வைரலாகும் பெண் கரோனா நோயாளியின் கதறல் வீடியோ.
”வலி உயிர் போகிறது ” வைரலாகும் பெண் கரோனா நோயாளியின் கதறல் வீடியோ.

By

Published : May 25, 2021, 3:57 PM IST

கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை ராமநாதபுரம் மாவட்டத்தில் மளமளவென அதிகரித்து வரும் நிலையில், மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 500 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் சுமார் 250 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை முறையாக அளிக்கப்படவில்லை என்ற புகார், ஏற்கெனவே எழுந்துள்ள நிலையில் இன்று அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள கீழக்கரையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் வெளியிட்டுள்ள கதறல் வீடியோ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'வலி உயிர் போகிறது' வைரலாகும் பெண் கரோனா நோயாளியின் கதறல் வீடியோ!

அந்த வீடியோவில் நான் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களாகிறது. இதுவரை, 'ஒரு மருத்துவர் கூட வந்து பார்க்கவில்லை, ஒரு ஊசிகூட போடவில்லை. நெஞ்சு வலி கடுமையாக இருக்கிறது. நான் செத்துவிடுவேன் போலிருக்கிறது' என்று அவர் கதறும் வீடியோ வெளியாகி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ராமநாதபுரத்தில் 19,200 ஆமைக் குஞ்சுகளை கடலில் சேர்த்து வனத்துறையினர் சாதனை!

ABOUT THE AUTHOR

...view details