தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருமகனை வெட்டிக்கொலை செய்த மாமனார் கைது! - Father-in-law arrested for murdering son-in-law

ராமநாதபுரம்: பரமக்குடியில் தினமும் மது அருந்திவிட்டு போதையில் தகராறு செய்த மருமகனை வெட்டி கொலை செய்த மாமனாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மருமகனை வெட்டிக்கொலை செய்த மாமனார் கைது!
மருமகனை வெட்டிக்கொலை செய்த மாமனார் கைது!

By

Published : Feb 4, 2021, 5:44 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரையைச் சேர்ந்த நாகநாதனுக்கும், பரமக்குடி அருகே பொதுவக்குடியைச் சேர்ந்த சங்கீதாவுக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சங்கீதா பரமக்குடி அருகே உள்ள எஸ்.அண்டக்குடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

சங்கீதாவின் கணவர் நாகநாதன் தினமும் மது அருந்திவிட்டு போதையில் குழந்தைகள் மற்றும் மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி கொடுமைப்படுத்தியுள்ளார். பலமுறை கண்டித்தும் அவர் தொடர்ந்து மது போதையில் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து நேற்று எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து காவல்துறையினர் நாகநாதனை அழைத்து எச்சரித்துள்ளனர்.

காவல்துறையில் புகார் அளித்ததும் பயனில்லாமல் தொடர்ந்து மனைவியையும், குழந்தைகளையும் தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகநாதனின் மாமனார் கருப்பையா அரிவாளால் அவரை வெட்டி படுகொலை செய்துவிட்டு எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

நாகநாதன் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். பரமக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையிலான எமனேஸ்வரம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:கிணற்றில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details