ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள நிலமழகியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிமணி என்பவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். தேர்தலில் வாக்களிப்பதற்காக வந்த அவர் ஊரிலேயே தங்கி மகள் யாஷிகா பிறந்தநாளை நேற்று (ஏப்.19) கொண்டாடிவிட்டு மீண்டும் வேலைக்குச் செல்வதாக திட்டமிட்டிருக்கிறார்.
தந்தை மகள் இருவரும் குளத்தில் மூழ்கி இறந்த துயரம்! - ராமநாதபுரம்
திருவாடானை அருகே தந்தையும் மகளும் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டின் பின்புறம் உள்ள குளத்தில் பெண் குழந்தையுடன் குளிக்கச் சென்றுள்ளார். யாஷிகாவை கரையில் விட்டுவிட்டு குளிக்கச் சென்ற அவர் நீரில் மூழ்கியுள்ளார். இதை அறியாத சிறுமியும் குளத்தில் இறங்கியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின் அடிப்படையில் எஸ்பி பட்டினம் காவல் துறையினர் தந்தை, மகளின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருவாடானை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: படகு மீது கப்பல் மோதி விபத்து: மறைந்த ராமநாதபுரம் மீனவரின் உடல் தகனம்