ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு 2018-19ஆம் ஆண்டிற்கான இன்சூரன்ஸ் செய்த இழப்பீட்டு தொகை தற்போது வரை கிடைக்கப் பெறவில்லை. அதனை வழங்கக் கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் அது கிணற்றில் போட்ட கல்லாக இருப்பதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் - இழப்பீடு வழங்கக் கோரிக்கை! - விவசாயிகள் பிரச்னை
ராமநாதபுரம்: 2018-19 பயிர் செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் - இழப்பீடு வழங்கக் கோரிக்கை!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பேரணியாக சென்ற விவசாயிகள், அங்கு அமர்ந்து அப்பகுதியை முற்றுகையிட்டனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இன்சூரன்ஸ் கம்பெனிகளிடம் பேசி 2018-19ஆம் ஆண்டிற்கான இன்சுரன்ஸ் தொகையையும், அதேபோல் 2017-18ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு கொடுக்கப்படவேண்டிய இழப்பீட்டு தொகையையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.