தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அழுகிய பயிர்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் வந்த விவசாயிகள் - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம்: அழுகிய பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட விவசாயிகள் உரிய இழப்பீடு தரக்கோரி மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில்  அழுகிய பயிர்களுடன் ஆட்சியரிடம் வந்த விவசாயிகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அழுகிய பயிர்களுடன் ஆட்சியரிடம் வந்த விவசாயிகள்

By

Published : Jan 18, 2021, 1:48 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர், மிளகாய், பருத்தி, சிறுதானிய வகைகள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை கணக்கெடுக்கும் பணி வேளாண் துறையினர் மூலம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுகுளத்தூர் வளநாடு புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் அழுகிய நெற்பயிர்கள், மிளகாய் செடிகள், பருத்தி உள்ளிட்டவற்றிற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அழுகிய பயிர்களுடன் ஆட்சியரிடம் வந்த விவசாயிகள்

ஆர்.எஸ். மங்களத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதேபோல் அலங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் கனமழையில் மூழ்கி முளைத்த பயிர்களுடனும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்தனர். மாவட்ட நிர்வாகம் உரிய கணக்கெடுப்பை நடத்தி விவசாயிகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க:செடியிலேயே முளைத்த பயிர்கள்: பெண்கள் ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details