கடந்த ஐந்து வருடங்களுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகளும் விவசாயப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பயிர்களுக்கு தேவையான உரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் உரத் தட்டுபாட்டை போக்கவும், நிலுவையில் உள்ள காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் உர மூட்டைக்கு மாலை அணிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.