கீழக்கரையை அடுத்துள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. சித்தாள் வேலை செய்து வரும் இவர், ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மாயமாகியுள்ளார். கார்த்திக் ராஜாவை அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்த குடும்பத்தினர், எங்கு தேடியும் கிடைக்காததால் காவல்துறையினரிடம் புகாரிளித்துள்ளனர். இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி வாலிவாக்கம் கடற்கரையில் பாதி எரிந்த நிலையில் கார்த்திக் ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
உண்மை குற்றிவாளிகளை கைது செய்ய வேண்டி ஆட்சியரிடம் மனு! - கார்த்திக் ராஜா
ராமநாதபுரம்: தனது மகனின் மரணத்திற்கு காரணமான உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டியும், உடற்கூறாய்வு அறிக்கை வழங்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.
இராமநாதபுரம்
இந்நிலையில், மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், 30 நாட்களுக்கு மேல் ஆகியும் உடற்கூராய்வு அறிக்கை இதுவரை எங்களிடம் வழங்கப்படவில்லை என்றும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் குடும்பத்தினர் மனு அளித்தினர்.