தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஃபேஸ்புக் நட்பால் நேர்ந்த விபரீதம் - மருத்துவமனையில் பெண் தற்கொலை - Facebook friendly tragedy female suicide in hospital

ஃபேஸ்புக் நட்பால் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணால் அப்பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது.

நேர்ந்த சோகம்
முகநூல் காதலால்

By

Published : Oct 19, 2021, 8:41 PM IST

ராமநாதபுரம்:தூத்துக்குடி மாவட்டம், கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா (29). இவரின் கணவரின் பெயர் ரெங்கன்; இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஐஸ்வர்யா ஃபேஸ்புக்கில், ராமநாதபுரம் மாவட்டம் கொம்பூதி பகுதியைச் சேர்ந்த விஜய் (31) என்பவருடன் நண்பராகி இருந்து வந்துள்ளார்.

மேலும் அப்பெண், தான் திருமணம் ஆகாதவர் என்று பழகி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து விஜய் அவரைப் பார்க்க வந்த போது, ஐஸ்வர்யாவுக்குத் திருமணம் ஆகிய நிலையில், இரண்டு குழந்தைகள் இருப்பது விஜய்க்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து விஜய் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐஸ்வர்யாவை ஒப்படைத்துள்ளார்.

மேலும், கணவர் ரெங்கனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும் காவல் நிலையம் வந்துள்ளார். ஆனால், காவல்நிலையத்தில் இருந்து கணவருடன் செல்ல ஐஸ்வர்யா மறுத்துள்ளார்.

முன்னதாக, ஐஸ்வர்யாவின் கணவர், ஏற்கெனவே மனைவியைக் காணவில்லை என்று திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்; இதனால், ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர், திருச்செந்தூர் காவல்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல

இறுதியாக, ஒரு நாள் இரவு மட்டும் அப்பெண்ணை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் பெண்கள் ஆலோசனை வழங்கும் மையத்தில் தங்க வைத்துள்ளனர்.

மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட பெண்

ஆனால், இன்று அதிகாலையில் கழிவறையில் ஐஸ்வர்யா தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். உடலைக் கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தந்தையை கொன்ற சைக்கோ மகன்..!

ABOUT THE AUTHOR

...view details