ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு துணை ராணுவத்தினர், காவல் துறையினர் தலைமையில் 24 மணி நேர சுழற்சி முறை மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சுழற்சி முறையில் கண்காணித்துவருகின்றனர். இந்நிலையில், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இணைய தளம் வாயிலாகப் பாடங்கள் நடத்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மடிக்கணினியுடன் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரிக்கு வந்தனர்.