ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி கடற்கரை இரட்டைத் தாழை எதிரேயுள்ள கடலில் 5 அடி நீளம், 3 அடி அகலம், 2 அடி உயரமுள்ள இரண்டு சிவப்பு நிற மிதவைப் பெட்டிகள் கரை ஒதுங்கின. இது குறித்து அப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடலோர காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் அதனை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது அது பெரிய கப்பல்களில் பயன்படுத்தப்படும் மிதவை. அது கப்பலில் இருந்து கழன்று வந்து இருக்கலாம்.