தமிழ்நாட்டில் நாளை (ஏப். 6) சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலுள்ள தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி பரபரப்புடன் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 357 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 357 வாக்குச்சாவடிகள் 30 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள், பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.