தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நான்கு சட்டப்பேரவை தேர்தலுக்கன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கும் பணி நேற்று (மார்ச்.7) நடைபெற்றது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு! - மாவட்ட தேர்தல் அலுவலர்
ராமநாதபுரம் : நான்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கும் பணி ஆட்சியர் தலைமையில் நேற்று(மார்ச்.7) நடைபெற்றது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
ராமநாதபுரம், பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் அனைத்து அரசியல்கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க :பெரியார் சொன்னதை... சீமான் செய்கிறார் - மகளிர் தினத்தில் மகத்தான பரிசு!