மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியானதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுகத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் 12 பறக்கும் படை மற்றும் 12 நிலைத்தன்மை படை ஆங்காங்கே வாகன சோதனையி ஈடுபட்டு வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக எந்த பணமும் சிக்காததால் அதிகாரிகள் மீது இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் அதிருப்தி அடைந்தார்.
வாகன சோதனையில் 1.40 லட்சம் சிக்கியது - பறக்கும் படையினர் அதிரடி - இராமநாதபுரம்
ராமநாதபுரம்: முதுகுளத்தூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 1.40 லட்சம் ரூபாய் சிக்கியது.
இன்று இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது உரிய ஆவணம் இன்றி 1.40 லட்சம் ரூபாய் சிக்கியது. இந்த பணம் சிறு போது கிராமத்தை சேர்ந்த கூடலிங்கம் என்பவரிடம் இருந்து பறக்கும் படையினர் கைப்பற்றினர். பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட முதுகுளத்தூர் கருவூலத்தில் ஓப்படைத்தனர்.
தேர்தல் நேரத்தில் இதுபோன்ற கெடுபிடிகள் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். காரணம் சில நேரங்களில் திருமண செலவுக்காக எடுத்து செல்கின்ற பணத்தையும் பறக்கும் படையினர் கைப்பற்றி பறிமுதல் செய்து உரிய ஆவணத்தை காமித்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவிக்கின்றனராம்.