தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைப்பெறுவதையடுத்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்படத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் பார்த்திபனூர் புறவழிச்சாலை மூன்று முனை சந்திப்பில் வாகன சோதனை செய்தனர்.
தேர்தல் பறக்கும் படை: ஆடு வியாபாரிகளிடமிருந்து பணம் பறிமுதல்! - ஆடு வியாபாரிகளிடமிருந்து பணம் பறிமுதல்
ராமநாதபுரம்: தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் ஆடு வியாபாரிகளிடமிருந்து 5.65 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
Election
அப்போது கடலூர் மாவட்டம் ராயப்பாளையத்தைச் சேர்ந்த ஆடு வியாபாரி துரைராஜ் இடமிருந்து ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 500, மதுரை கொடி குளம்புதூரைச் சேர்ந்த ஆடு வியாபாரி ஆனைமலை ரூ.2 லட்சத்து ஆயிரம், விருதுநகர் மாவட்டம் பொட்ட பச்சேரியைச் சேர்ந்த ஆடு வியாபாரி கண்ணனிடம் இருந்து ரூ.91 ஆயிரத்து 800 என மொத்தம் 5 லட்சத்து 65 ஆயிரத்து 300 ரூபாயை பறிமுதல் செய்தனர்.