சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருப்பதை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், பொதுமக்கள் 100 சதவீத வாக்குப்பதிவு செய்யும் விதத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வாக்களிக்க பொதுமக்கள் தயாராக வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடல் - Ramand Election awareness
ராமநாதபுரம்: சுதந்திரமாகவும், நேர்மையாகவும் சட்டப்பேரவைத் தேர்தலை பொதுமக்கள் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடலை ராமநாதபுரத்தில் இன்று (மார்ச் 5) மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
![சட்டப்பேரவைத் தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடல் ராமநாதபுரம் ஆட்சியர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10884251-thumbnail-3x2-electio.jpg)
ராமநாதபுரம் ஆட்சியர்
தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள்
இந்தக் குறும்படங்கள் மக்கள் கூடும் இடங்களில் திரையிடும் பணி துவங்கியது. அந்தப் பணியினை ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (மார்ச் 5) துவக்கிவைத்தார். அதனைத்தொடர்ந்து வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும், துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.