ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர் அருளானந்தம். இவருக்கு கொச்சினில் ஆழ்கடல் படகு ஒன்று உள்ளது. இந்த படகில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்கள் கடந்த 12ஆம் தேதி ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
ஆனால், அவர்கள் நடுக்கடலில் இருந்ததால் கரோனா தொடர்பான எந்த செய்தியும் தெரியவில்லை. இந்நிலையில் அவர்கள் நேற்று காலை வழக்கம்போல் கொச்சின் துறைமுகத்திற்கு வந்துள்ளனர். ஆனால், கேரள அரசு அவர்களை கரையில் இறங்க அனுமதிக்காததால் அவர்கள் நாகப்பட்டினம், மூக்கையூர் துறைமுகத்திற்குச் சென்றுள்ளனர்.