ராமநாதபுரம் மாவட்டம் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவற்றை பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இன்று மண்டபம் கடல் பகுதியில் கடல் அட்டைகளை சிலர் பிடிப்பதாக மண்டபம் கடலோரக் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
200 கிலோ கடல் அட்டையை பிடித்த 11 பேர் கைது!! - கடல் அட்டைகள் கடலில் விடப்பட்டது
ராமநாதபுரம் : மண்டபம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டையை பிடித்த 11 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
sea_cucumber_seize
இதையடுத்து, சந்தேகத்திற்கிடமாக தென்பட்ட இரண்டு விசைப்படகுகளை சோதனையிட்டபோது அதில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை 200 கிலோ இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து விசைப் படகில் வந்த 11 பேரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய படகுகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த கடல் அட்டைகள் கடலில் விடப்பட்டன. மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.