ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களில் பணப் பட்டுவாடா செய்ததாக அதிக அளவில் புகாா்கள் எழுந்தன. தற்போது நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் ’வாக்குக்கு பணம் பெறமாட்டோம்’ என்ற தலைப்பில் மக்களிடையே விழிப்புணா்வு பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் அருகே சேதுக்கரை, சின்னக்கோயில் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலோரத்தில் குடிசை வீடுகள் அமைத்து பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். மீனவர்களின் வசிப்பிடமானது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடம் எனக் கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட பல்வேறு துறைகளில் இலவசப் பட்டா வழங்கக் கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.