தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தை முழுமையாக கைப்பற்றிய திமுக கூட்டணி!

நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் திமுக அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றிபெற்று மாவட்டத்தை முழுமையாக கைப்பற்றியது.

ராமநாதபுரத்தை முழுமையாக கைப்பற்றிய திமுக கூட்டணி!
ராமநாதபுரத்தை முழுமையாக கைப்பற்றிய திமுக கூட்டணி!

By

Published : May 3, 2021, 12:09 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, திருவாடனை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் என 4 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி அதற்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணும் பணி நேற்று (மே 2) அண்ணா பொறியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில், ராமநாதபுரம் தொகுதியில் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பாஜக சார்பாக குப்புராமு போட்டியிட்டனர். பரமக்குடியில் திமுக சார்பாக முருகேசன், அதிமுக சார்பாக சதன் பிரபாகரன் களமிறக்கப்பட்டார். முதுகுளத்தூரில் திமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், அதிமுக சார்பாக கீர்த்திகா முனியசாமி போட்டியிட்டனர்.

அதேபோல திருவாடனை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் கரு. மாணிக்கம், அதிமுக சார்பாக ஆணி முத்து களம் கண்டனர். இந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெளியான முடிவுகளின்படி திமுக முழுவதுமாக ராமநாதபுரத்தை கைப்பற்றியது.

இதில் ராமநாதபுரத்தில் அதிகபட்சமாக காதர்பாட்சா முத்துராமலிங்கம் 50 ஆயிரத்து 478 வாக்குகள் பெற்று தனது வெற்றியை பதிவு செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details