தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சியைச் சிறப்பாக நடத்துவேன் - மு.க. ஸ்டாலின் உறுதி - சென்னை மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம்: பரப்புரையின்போது ஆட்சியைச் சிறப்பாக நடத்துவேன் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

ஆட்சியை சிறப்பாக நடத்துவேன்
ஆட்சியை சிறப்பாக நடத்துவேன்

By

Published : Feb 5, 2021, 11:53 AM IST

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுவருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் தெளிச்சாத்தநல்லூர் பகுதியில் அவர் பேசுகையில், "கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்தான் கருணாநிதி. அவர் தற்போது உள்ள அரசுபோல் தவறான வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்கியதில்லை.

கருணாநிதி இறந்தபோது அவரது உடலை கடற்கரையில் அடக்கம்செய்ய இடம்தர மறுக்கப்பட்டது. அரசின் உத்தரவை மீறி கடற்கரையில் அடக்கம்செய்ய முடிவுசெய்தேன். ஆனால் சட்டம் ஒழுங்கு பற்றி கவலைப்பட்டேன்.

ஆட்சியைச் சிறப்பாக நடத்துவேன்

அந்தச் சட்டமே நல்ல ஒரு தீர்ப்பை வழங்கியது. அண்ணா, பெரியார், கருணாநிதி வழியில் நான் செயல்படுகிறேன். உங்களில் ஒருவன் ஆட்சி நடத்துவது போன்று சிறப்பாக நடத்துவேன்" என்றார்.

இதையும் படிங்க: உயிரிழந்த மீனவர்களின் குழந்தைகள் கல்விச்செலவை திமுக ஏற்கும்' - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details