தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக எம்எல்ஏ சார்பாக பரவும் தவறான தகவல்: கட்சியினர் எஸ்பியிடம் புகார்! - Ramnathapuram news

ராமநாதபுரம்: மதுரை மத்திய தொகுதி திமுக எம்எல்ஏ கூறியதாக தவறான தகவல் பரப்பிவரும் நபர்கள் மீது அக்கட்சி நிர்வாகிகள் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

திமுக தொழில்நுட்ப அணி சார்பாக திமுக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ கூறியது என தவறான தகவல் பரப்பப்படுவதாக எஸ்.பியிடம் புகார் மனு.
திமுக தொழில்நுட்ப அணி சார்பாக திமுக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ கூறியது என தவறான தகவல் பரப்பப்படுவதாக எஸ்.பியிடம் புகார் மனு.

By

Published : Nov 5, 2020, 6:49 PM IST

திமுகவின் இராமநாதபுரம் தொழில்நுட்ப அணி தலைவர் விஜய கதிரவன் தலைமையில், அக்கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் இன்று (நவ. 05) புகார் மனு அளித்தனர்.

அதில், "மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பொறுப்பிலிருந்து வரும் தியாகராஜனின் பெயரில் உள்ள பேக் ஐடி ஒன்று, கடந்த 3ஆம் தேதி மதியம் சுமார் 02.29 மணி அளவில் ஒரு தவறான தகவலைப் பகிர்ந்துள்ளது. அதில், சட்டப்பேரவை உறுப்பினர் தியாகராஜன் முத்துராமலிங்கத்தேவர் பற்றி அவதூறாகப் பேசியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து சட்டப்பேரவை உறுப்பினருக்கு மிரட்டல் வந்தது. இது போன்று தவறான ஒரு தகவலைத் தயாரித்து, அதை இந்து கட்சியைச் சேர்ந்த சிலர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அவரின் ட்விட்டர் பக்கம் போன்று போலியான புகைப்படத்தை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்கள்.

இதன்மூலம் தென் மாவட்டங்களில் இன கலவரத்தை தூண்டும் வகையில், குற்றம் புரியும் எண்ணத்துடனும் செய்துள்ளனர். இது போன்று பொய்யான தகவலைப் பதிவிட்டு சட்டவிரோதமாக செயல்பட்டுள்ள நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இதையும் படிங்க...’தடையை மீறி வேல் யாத்திரை நடந்தால் எதிர்ப்போம்’

ABOUT THE AUTHOR

...view details