ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் 32 சுற்றுகள் முடிவில் மொத்தமாக 1 லட்சத்து 11 ஆயிரத்து 75 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து களம் கண்ட பாஜக வேட்பாளர் குப்புராமு 60 ஆயிரத்து 763 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட கண் இளங்கோவன் 17 ஆயிரத்து 62 வாக்குகளையும். சுயேட்சை வேட்பாளர் மலைச்சாமி 10 ஆயிரத்து 845 வாக்குகளையும், அமமுக சார்பாக போட்டியிட்ட முனியசாமி 6 ஆயிரத்து 776 வாக்குகளையும், மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்ட சரவணன் 1,996 வாக்குகளை பெற்றனர்.