தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியா? தனித்து போட்டியா? : பிரேமலதா விளக்கம்

ராமநாதபுரம்: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனவரியில் அறிவிப்பு வெளியிடப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா
பிரேமலதா

By

Published : Aug 31, 2020, 3:27 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ”எதிர்வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியுடன் போட்டியிடுவதா என்பது குறித்து முடிவு ஜனவரி மாதம் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கூட்டி அறிவிக்கப்படும். கட்சித் தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயண பரப்புரையில் விஜயகாந்த் கண்டிப்பாக ஈடுபடுவார்.

பிரேமலதா எழுதிய காணொலி

சட்டப்பேரவைத் தேர்தல், தேமுதிக வெற்றி பெறுவதற்கான திருப்புமுனையாக அமையும். தற்போது கூட்டணியோடு இருக்கும் அதிமுக அரசு பத்தாண்டு கால ஆட்சியை முடிக்கும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் நிறைகளும், குறைகளும் உள்ள அரசாகத்தான் தேமுதிக பார்க்கிறது. மத்திய அரசு பல அறிவிப்புகளை வெளியிடுகிறது. ஆனால் செயல்பாட்டில் குறைந்த அளவே வருகின்றன” என்றார்.

இதையும் படிங்க:மக்களுக்கு ஒன்றெனில் பேசிக்கொண்டிருக்க மாட்டேன், ஒன்லி ஆக்சன்தான் - விஜயகாந்த்

ABOUT THE AUTHOR

...view details