ராமநாதபுரம்: கரோனா இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் பிரதம மந்திரியின் பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் 11 ஆயிரம் கிலோ ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 1000 கிலோ திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யமுடியும். இதனை காணொளி வாயிலாக ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.