ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவிக்கும்வகையில், குந்துகால் பகுதியில் ரூ.70 கோடி மதிப்பில் புதிதாக மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்.19ஆம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
இந்த மீன்பிடி இறங்குதளத்தில் சுமார் 400 விசைப்படகுகளை நிறுத்திவைக்கலாம். மீனவர்கள் பிடித்துவரும் மீன்களை சேமித்துவைத்திட குளிர்பதன சேமிப்பு கிடங்கு உள்ளது. இதனை இன்று (நவ.21) மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அலிவர் ஆய்வுசெய்தார்.