இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே கடந்த இரண்டு நாட்களாக புரெவி புயல் நிலை கொண்டுள்ளது. அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக இருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மாறி அதே இடத்தில் நீடித்து வருகிறது.
கடந்த நான்கு நாட்களாக இராமேஸ்வரம் பகுதியில் பலத்த மழை பெய்தது. தற்போது மழை குறைந்து உள்ளது இந்நிலையில் இராமேஸ்வரம் அருகே உள்ள நடராஜபுரம் குடியிருப்பில் மழைநீர் அதிக அளவில் தேங்கி உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து (இன்று டிச. 06) மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று அந்தப் பகுதிகளை ஆய்வு செய்தார்.