தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்பி நவாஸ் கனி VS அமைச்சர் ராஜகண்ணப்பன் இடையே காரசாரமான வாக்குவாதம்; விளையாட்டு போட்டியின் பரிசளிப்பு விழாவில் என்ன நடந்தது? - Ramanathapuram news

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கும் விழாவில், எம்பி நவாஸ் எம்பி வருவதற்கு முன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதால் அவருக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

முதலமைச்சர் கோப்பை பரிசளிப்பு விழாவில் மோதல்
முதலமைச்சர் கோப்பை பரிசளிப்பு விழாவில் மோதல்

By

Published : Jun 17, 2023, 11:07 PM IST

Updated : Jun 18, 2023, 2:52 PM IST

முதலமைச்சர் கோப்பை பரிசளிப்பு விழாவில் மோதல்

இராமநாதபுரம்:தமிழ்நாடு முதலமைச்சரின், விளையாட்டை ஊக்குவிக்கும் வண்ணம் 'முதலமைச்சர் கோப்பை'-க்கான விளையாட்டுப் போட்டி மாவட்ட அளவில் இன்று (ஜூன் 17) நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் தடகளம், கபாடி, இறகுபந்து, வாலிபால், சிலம்பம், சதுரங்கம், கிரிக்கெட், கூடைப்பந்து, கையுந்துபந்து, சிறப்பு கையுந்துபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், மேசைபந்து மற்றும் எறிபந்து ஆகிய போட்டிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ராமநாதபுரத்தில் அரசு சார்பில் விளையாட்டுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த விழாவிற்கான அழைப்பிதழில், 3 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும் என போடப்பட்டு அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். எனவே, இரண்டு 55 மணிக்கு நவாஸ் கனி எம்பி நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்துள்ளார். அப்போ, நிகழ்ச்சி ஏற்கனவே இரண்டு 35 மணி அளவில் துவங்கி நடைபெற்று கொண்டிருந்ததை அறிந்த அவர், கோபமடைந்து மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து கேள்வி கேட்டுள்ளார்.

இதையும் படிங்க:Kerala Minor Girl Rape Case:சிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை!

பின்னர், அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் சென்ற நவாஸ் கனி எம்.பி., எதற்காக அழைப்பிதலில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக விழாவை தொடங்கினீர்கள் என்றும் தான் வருவதற்கு முன்பு விழா தொடங்கப்பட்டதற்கான காரணத்தை கூறும்படியும் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

பின்னர், வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றிப்போக, இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு, அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோரிடையே இடையே ஏற்பட்ட மோதல் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, திமுகவில் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர்கள் இரு பிரிவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நடந்துள்ள இந்த சம்பவம், கட்சியினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு கொடுத்து, அவர் வருவதற்குள்ளாகவே நிகழ்ச்சி துவங்கியதால் நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மக்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க:"ஓட்டுக்கு காசு வேணாம்! அப்பா, அம்மா கிட்ட சொல்லுங்க" - அரசியல் அட்வைஸ் சொன்ன விஜய்

Last Updated : Jun 18, 2023, 2:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details