ராமநாதபுரம் : ராமேஸ்வரம் அதனைச் சுற்றியுள்ள மன்னார் வளைகுடா உயிர்கோள பகுதியில் குருசடை மணலி உள்ளிட்ட 22 தீவுகள் உள்ளன. இந்த பகுதிகளில சுற்றுலாப் பயணிகளால் கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்டப் பொருள்கள் கரை ஒதுங்குவது வழக்கமாகியுள்ளது.
அதனை மண்டபம் வனத்துறையினர் அவ்வப்போது அகற்றி தூய்மை செய்வர். இந்நிலையில், இன்று(ஜூலை.22) மண்டபம் வனச்சரகர் வெங்கடேசன் தலைமையில்,வனக் காப்பாளர்,வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் குருசடை தீவு பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.