ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
கமுதியில் நவீன ராட்சத இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு
ராமநாதபுரம்: கமுதியில் நவீன ராட்சத இயந்திரம் மூலம் அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இந்நிலையில் கமுதி பேரூராட்சிப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் செயல் அலுவலர் ரா. இளவரசி, பரமக்குடி வட்டார சுகாதாரத் துறை இணை இயக்குனர் இந்திரா, பேரையூர் ஆரம்ப சுகாதார நிலையம் தலைமை மருத்துவர் அசோக் ஆகியோரது அறிவுறுத்தலின்பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பொண்ணுபாக்கியம் தலைமையில் கமுதி பேரூராட்சிக்குள்பட்ட பேருந்து நிலையம், நாடார் பஜார், செட்டியார் பஜார், முஸ்லீம் பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் ராட்சத நவீன இயந்திர தெளிப்பான் மூலம் காலை, மாலை இரு வேளைகளில் கிருமிநாசினி தெளித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:நாளை தொடங்குகிறது மீன்பிடி தடை காலம்!