தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏர்வாடி தர்கா அருகே கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு! - தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

ராமநாதபுரம்: ஏர்வாடி தர்கா அருகே கி.பி. 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரபி எழுத்து பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டெக்கப்பட்டுள்ளது.

ஏர்வாடி தர்கா அருகே 16ஆம் நூற்றாண்டை கல்வெட்டு கண்டெடுப்பு!
ஏர்வாடி தர்கா அருகே 16ஆம் நூற்றாண்டை கல்வெட்டு கண்டெடுப்பு!

By

Published : Jul 30, 2020, 4:39 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகே அமைந்துள்ள ஏரான்துறை கஞ்சிப்பள்ளி பகுதியில் உள்ள தோப்பில், பழைய காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு இருப்பதாக தொல்லியல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளருமான வே.ராஜகுரு நிகழ்விடத்திற்குச் சென்று கல்வெட்டை ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஏர்வாடி தர்கா அருகே ஏரான்துறையிலுள்ள தோப்பில் 6½ அடி உயரம் 1½ அடி அகலம் உள்ள ஒரு கடற்கரைப் பாறையால் ஆன ஒரு தூண் உள்ளது. இதன் இரு பக்கமும் கல்வெட்டுகள் உள்ளன. ஒரு பக்கத்தில் தமிழ் கல்வெட்டும், மறுபக்கத்தில் பெரிய அளவிலான சில அரபி எழுத்துகளும் குடுவை போன்ற ஒரு குறியீடும் உள்ளன. அரபி எழுத்துகள் உள்ள தூணின் பின்பகுதி மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.

20 வரிகள் கொண்ட தமிழ் கல்வெட்டில், பல சொற்கள் அழிந்த நிலையில் உள்ளதால், இக்கல்வெட்டு பற்றிய முழுமையான தகவல்களை அறிய முடியவில்லை. எனினும், இதில் உள்ள நாயகத்து போன்ற சில சொற்கள் மூலம், இக்கல்வெட்டு ஏர்வாடியிலுள்ள செய்யது இபுராகிம் பாதுஷா நாயகம் தர்காவுக்கு நிலதானம் வழங்கப்பட்டதாக இருக்கும் என யூகிக்கலாம். தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் அளவுகள் இதில் சொல்லப்பட்டுள்ளது.

கல்வெட்டில் நில அளவுகள் குறித்து சொல்லும்போது இரு நபர்களின் பெயரில் உள்ள இரு கொத்துத் தெங்குகள் குறிப்பிடப்படுகின்றன. தெங்கு என்பது தென்னை மரத்தையும் கொத்துத் தெங்கு என்பது தென்னந்தோப்பையும் குறிக்கிறது. தற்போதும் கேரளா மற்றும் இலங்கையில் தென்னையை தெங்கு என்றுதான் அழைக்கிறார்கள் என்பது கவனத்துக்குரியது. மன்னார் வளைகுடா கடற்கரைப் பகுதியான இங்கு பல நூற்றாண்டுகளாக தென்னந்தோப்புகள் இருந்து வருவதை இதன்மூலம் அறிய முடிகிறது.

கல்வெட்டில் நில அளவுகளின் எல்லை குறிப்பிடும்போது கீழைக் கல் என ஒரு சொல் வருகிறது. இது கடற்கரை வழியாக கீழக்கரை செல்லும் பாதையின் வழி காட்டும் கல்லாக இருக்கலாம். இக்கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இதை கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details