தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி கொண்டு வந்தேனா? - கருணாஸ் பதில் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி

ராமநாதபுரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கியுடன் தான் வரவில்லை என எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கருணாஸ்

By

Published : Aug 27, 2019, 12:01 PM IST

திருவாடனை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15 பள்ளிகளுக்கு மடிக்கணினி வழங்குவதற்கு நேற்றைய தினம் எம்எல்ஏ கருணாஸ் ராமநாதபுரம் வந்திருந்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுத்தார். அப்போது அவர் இடுப்பில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக தகவல் பரவியது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கருணாஸ்

இதுகுறித்து கருணாஸ் தொலைபேசி வாயிலாக ஈடிவி பாரத் செய்தியாளரிடம் கூறியதாவது, ''என்னிடம் கைத்துப்பாக்கிக்கான உரிமம் உள்ளது. நேற்று நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கியுடன் வந்தேன் என்பது தவறான தகவல். இடுப்பில் வெறும் துப்பாக்கி உறை மட்டுமே இருந்தது. அதில் துப்பாக்கி இல்லை. மறாக காரில்தான் எப்போதும் துப்பாக்கி வைத்திருப்பேன் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details