ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி, அரிச்சல்முனை ஆகிய சுற்றுலாத்தலங்களில், கரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த சில நாள்களாகவே சுற்றுலாப் பயணிகளின் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் மூலம் நடைபெறும் வியாபாரத்தை நம்பி வாழ்க்கையை நடத்திவரும் ஹோட்டல், சங்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்கள் கடைகளையும் மூடிவிட்டனர்.
இதுகுறித்து அங்கு உணவகம் ஒன்றை நடத்தும் செல்லம்மாள் கூறுகையில், 'கடந்த ஒரு மாத காலமாகவே தனுஷ்கோடி, அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது. தற்போது சுற்றுலா பயணிகளின் வரவு சொற்ப அளவிலேயே இருந்து வருகிறது.
அதுவும் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வரவு பெருமளவு குறைந்துள்ளது. இதனால், இங்கு வியாபாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. கடலையும் கடல் மூலம் கிடைக்கும் மீனையும் நம்பியே நாங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகிறோம்' என்று கூறினார்.
இதையும் படிங்க... கரோனா வைரஸ் தொற்று - வெறிச்சோடிய வால்பாறை