தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’22 புனித தீர்த்தங்களில் நீராட அனுமதி வேண்டும்’ - பக்தர்கள் கோரிக்கை - ராமநாதபுரம் அண்மைச் செய்திகள்

ஊரடங்கு தளர்வுகளை முன்னிட்டு நாளை கோயில்கள் திறக்கப்பட உள்ள நிலையில், ராமநாதசாமி கோவிலின் 22 புனித தீர்த்தங்களில் நீராட அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பக்தர்கள் கோரிக்கை
பக்தர்கள் கோரிக்கை

By

Published : Jul 4, 2021, 6:52 PM IST

ராமநாதபுரம்:கரோனா தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்து வருவதையொட்டி, அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் (ஜூலை 5) தமிழ்நாடு முழுவதும் கோயில்களில், பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையொட்டி ராமேஸ்வரம் ராமநாத சாமி கோயிலை தூய்மைப்படுத்தும் பணி இன்று (ஜூலை 4) நடைபெற்றது. கோயில் திறப்பு காரணமாக உள்ளூர், வெளியூரில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டம் அதிகரிப்பினும் தகுந்த இடைவெளியை முறையாக கடைபிடித்து சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவில் திறப்பை முன்னிட்டு, கரோனா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெறும் காட்சி

கோயிலுக்குள் நுழையும் பக்தர்களின் மீது கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரங்களும், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது. மேலும் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தேங்காய், பூ உள்ளிட்ட பூஜை பொருள்களை எடுத்து வரவும், புனித தீர்த்தங்களில் நீராடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த புனித தீர்த்தங்களில் நீராடினால், தங்கள் முன்னோர்கள் செய்த பாவம் உள்பட அனைத்து பாவங்களும் நீங்கும் என்ற நம்பிக்கையின் காரணமாகவே, பெரும்பாலானோர் ராமேஸ்வரத்தை நோக்கி வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு முறையான கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், 22 புனித தீர்த்தங்களிலும் நீராட அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:TN Unlocked: தமிழ்நாடு முழுவதும் ஆரம்பம்

ABOUT THE AUTHOR

...view details