தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அண்மையில் ஏழு சாதி உள்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், ராமநாதபுரம் அரண்மனை முன்பாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் 7 உள்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கறுப்புச்சட்டை அணிந்து மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.