தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாய்க்கடியால் படுகாயமடைந்த பெண்மான் வனத்துறையிடம் ஒப்படைப்பு! - ராமநாதபுரத்தில் நாய் கடியால் காயமடைந்த மான்

ராமநாதபுரம்: தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த பெண்மானை விரட்டிக் கடித்த நாயிடமிருந்து மானை மீட்டு வனத்துறையினரிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனர்.

Deer recovered

By

Published : Oct 31, 2019, 7:56 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள வழுதூர் கிராமத்தில் தண்ணீர் தேடி பெண்மான் ஒன்று கிராமத்துக்குள் வந்துள்ளது. அப்போது, அந்தமானை நாய் ஒன்று துரத்திக் கடித்ததுள்ளது. இதைக்கண்ட கிராம மக்கள் காயமடைந்த பெண்மானை நாயிடமிருந்து மீட்டு வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலையடுத்து, வனச் சரகர் சதீஸ் குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பெண்மானை மீட்டு அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

நாயிடமிருந்து மீட்க்கப்பட்ட பெண்மான்

இதுகுறித்து வனச்சரகர் சதீஸ்குமார் கூறுகையில், தகவல் அறிந்து இங்கு வந்து ஐந்து வயது மதிக்கத்தக்கப் பெண் மானை மீட்டு அரண்மனை அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில் முதலுதவி மற்றும் வெறிநாய்க்கடி ஊசி செலுத்தி தேர்த்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் கொண்டு விடப்பட்டுள்ளது என்றார். மேலும்இதுவரை ராமநாதபுரத்தில் நாய் கடித்து 15 மான்கள் மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு மீண்டும் சரணாலயத்தில் விடப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதையும் படிங்க: புள்ளிமானை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு -அச்சத்தில் கிராம மக்கள்

ABOUT THE AUTHOR

...view details