ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நயினார்கோவில், வாணியவல்லம், அண்டக்குடி, கீழப்பெருங்கரை, சூடியூர் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதியில் அதிகளவில் புள்ளிமான்கள் வசித்து வருகின்றன.
இந்த மான்கள் அடிக்கடி குடிநீர் தேடி, சாலை பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். அப்படி வரும் சில மான்கள் சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழந்து விடுகின்றன.
இந்நிலையில், இன்று காலை பரமக்குடி வைகையாற்று பகுதியில் குடிநீர் தேடி நான்கரை வயது ஆண் புள்ளிமான் ஒன்று வந்ததுள்ளது.
அந்தமானை அப்பகுதியில் இருந்த நாய்கள் விரட்டி, விரட்டி கடித்தன. இதில் புள்ளிமான் படுகாயமடைந்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த வனசரகர் கர்ணன் தலைமையிலான வனத்துறையினர், மருத்துவர் மானின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வு செய்து வைகை ஆற்றின் கரை பகுதியில் புதைத்தனர்.