தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீன்பிடி தடை: ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை நீடிக்கும் - இராமநாதபுரம் மீனவர்கள்

ராமநாதபுரம்: இந்த ஆண்டின் மீன்பிடி  தடை காலம் நேற்று இரவு முதல் தொடங்கியது, ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை என 60 நாட்கள் இந்த தடை அமலில் இருக்கும்.

deep-sea-fishing-ban-for-60days

By

Published : Apr 15, 2019, 5:03 PM IST

தமிழக ஒழுங்குமுறை மீன் பிடி சட்ட திருத்தம் 1983- ன் கீழ் ஆண்டுதோறும் மீன்பிடி தடை காலம் விதிப்பது வழக்கம். கடல் மீன்கள் குஞ்சு பொறிப்பதற்காகவும் மேலும் கடல் வளம் பெருகுவதற்காக இந்த மீன்பிடி தடைக்காலம் உருவாக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ல் தொடங்கி அடுத்த 45 நாட்கள் வரை மீன்கள் இனப்பெருக்கம் செய்வதாக கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்துகிறது.

இந்நிலையில், கடந்தாண்டு முதல் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நடப்பாண்டில், ஜூன் 15 ஆம் தேதி வரை 60 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது.

இதன் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள 1700 விசைபடகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் படகுகள் மற்றும் உபகரணங்கள சரிசெய்யும் பணியில் இறங்கி உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details