தமிழ்நாடு

tamil nadu

புரெவி புயலால் படகுகள் சேதம்: நிவாரணம் கேட்டு மீனவர் சங்கம் கோரிக்கை

By

Published : Dec 7, 2020, 5:59 PM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் புரெவி புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் கேட்டு மீனவர் சங்கத்தினர் கேரிக்கை வைத்துள்ளனர்.

புரெவி புயலால் படகுகள் சேதம்
புரெவி புயலால் படகுகள் சேதம்

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரத்தில் 116 படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இருப்பினும் அதில் 40 படகுகள் சேதமடைந்தன. குறிப்பாக தங்கச்சிமடம் சர்புதீன் என்பவரின் படகு பெரிய அளவில் சேதமடைந்தது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இன்று (டிச.7) அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதன் செயலாளர் சேசுராஜ் தலைமை வகித்தார்.

அப்போது கூட்டத்தில் படகிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க: 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழையில் மூழ்கி சேதம்: நிவாரணம் கோரும் உழவர்கள்

ABOUT THE AUTHOR

...view details