கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புனரமைப்பு, மறுவாழ்வு திட்டத்தின் கீழ் உபதிட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக, ஒருகிணைந்த கடல் கூண்டு மீன் வளர்ப்பு, கடற்பாசி வளர்ப்பு, ஆளி வளர்ப்பு , வள்ளம், மீன் விற்பனை அங்காடி ஆகியவை 75 சதவீதம் அரசு மானியம், 25 சதவீதம் பயனாளிகள் பங்களிப்புத் தொகையுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அவற்றில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கென ஒரு அலகிற்கு 24 லட்சத்து 31 ஆயிரத்து 200 ரூபாய் என்ற அடிப்படையில், 10 அலகுகளுக்கு 2 கோடியே 48 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட 10 அலகில் மண்டபம் மீன்வள உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டு பகுதிக்கென இரண்டு அலகுகள் ஒதுக்கப்பட்டு அரசு பங்களிப்புத் தொகை ஒரு அலகிற்கு 18 லட்சத்து 23 ஆயிரத்து 400 ரூபாய் என்ற அடிப்படையில் 36 லட்சத்து 46 ஆயிரத்து 800 ரூபாயும் , பயனாளிகள் பங்களிப்பு தொகை ஒரு அலகிற்கு 6 லட்சத்து 07 ஆயிரத்து 800 ரூபாய் என்ற அடிப்படையில் 2 அலகுகளுக்கு 12 லட்சத்து15 ஆயிரத்து 600 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளன.